தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் தலைமையில் நேற்று (08.05.2025) நடைபெற்றது.
இதில் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, குடும்பஓய்வூதியம் உள்ளிட்ட 26 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி சான்று பெற்றுள்ள 4 முன்னாள் படைவீரர்களின் மனைவி/கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு மின்மோட்டார் பொருந்தப்பட்ட தையல் இயந்திரங்களையும், 5 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு இலவச கண்ணாடி வழங்குவதற்கான ஆணைகளையும் சதீஸ் வழங்கினார்.