தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வன சரகத்துக்கு உட்பட்ட காடு செட்டிபட்டி கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் மூன்று காட்டு யானைகள் நடமாடி வருவதால், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வனத்துறையினர் நேற்று புதன்கிழமை மாலை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளுக்கோ விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. யானைகளை கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், பட்டாசுகள் வெடிப்பது, சத்தமிடுவது, புகைப்படம் எடுப்பது கூடாது எனவும் தெரிவித்தனர்.