தர்மபுரி: சாலை அமைக்க முன்னாள் அமைச்சர் பூமி பூஜை

4பார்த்தது
பாலக்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கனிமவள நிதி திட்டத்தின் கீழ் 6.37 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் எம். எல். ஏ நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருத்துவர்கள், செவிலியர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி