தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், மே 30, சனிக்கிழமை அன்று பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரன் கொட்டாய் கிராமத்தில் தேர்தல் களப்பணியாற்றிய அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், பாலக்கோடு தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.