தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாலக்கோடு தொகுதியில்
திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாலக்கோடு பேருந்து நிலையப் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி மற்றும் பாலக்கோடு தொகுதி
திமுக முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எனப் பலர் பங்கேற்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.