தர்மபுரி: சரக்கு வேனில் குட்கா கடத்தல் - சரக்குவேன் பறிமுதல்

1பார்த்தது
தர்மபுரி: சரக்கு வேனில் குட்கா கடத்தல் - சரக்குவேன் பறிமுதல்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கும்பராஹள்ளி சோதனை சாவடியில் வெள்ளிக்கிழமை அன்று காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், சரக்கு வேனில் 200 கிலோ குட்கா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வேன் ஓட்டுநர் மகேஷை காவல்துறையினர் கைது செய்து, குட்கா மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி