தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நல்லம்பள்ளி, லளிகம், கோவிலூர், பாலக்கோடு, புலிக்கரை, கடமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மற்றும் கனமழையாகப் பொழிந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது.