தர்மபுரி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்றுடன் முடிவடைந்தது. இருப்பினும், நேற்று (மே 28) பகல் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவியது. மாலை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்து காற்று வீசியது. பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடமடை போன்ற பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்தது. நல்லம்பள்ளி, தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது.