தருமபுரி விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா இன்று நவ. 23 ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் சதீஸ் கோப்பையினை அறிமுகம் செய்து துவக்கி வைத்தார். இதில் உடன் எம்பி மணி, எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், எஸ்பி மகேஸ்வரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, கோட்டாட்சியர் காயத்ரி என பலர் பங்கேற்றனர். மேளதாளங்கள் முழங்க கோப்பை உற்சாகமாக வரவேற்கப்பட்டு அரங்கம் முழுவதும் வீரர் வீராங்கனைகளுடன் வலம் வந்தது.