தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, ஞாயிற்றுக்கிழமை அன்று இண்டூர், சோமனஅள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாகவும், விரைவில் அனைத்து மக்கள் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகவும் அவர் உறுதியளித்தார். மேலும், போதையில்லா தருமபுரியை உருவாக்குவோம் என்றும் அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.