பாலக்கோடு ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில், ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ நவகிரக மூர்த்திகளுக்கும், ஸ்ரீ சீதா ராம லக்க்ஷமன், ஹனுமன் சமேத மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. இன்று திங்கட்கிழமை அதிகாலை கோமாதா பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், கலச ஆராதனை, நவகிரக ஹோமம் யாகசாலையிலிருந்து புனிதகலச தீர்த்த குடத்தை கோயில் முக்கியஸ்தர்கள் தலை மீது எடுத்து சென்று கோயில் கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டி கலசத்துக்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.