தர்மபுரி: நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
புதன்கிழமை மாலை, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலம் சார்ந்த பராமரிப்பு பணிகளைக் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டினை குறைக்க வேண்டும், நிலஅளவர்களாக ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள தரம் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான நில அளவை அலுவலர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :