தர்மபுரி: வார சந்தையில் 1. 80 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

1பார்த்தது
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வார சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஆடுகள் ₹3000 - ₹24,000 வரை என 90 லட்சத்திற்கும், மாடுகள் ₹8000 - ₹65,000 வரை என 87 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் ₹350 - ₹1250 வரை என 3 லட்சத்திற்கும் விற்பனையாகின. மொத்தமாக ₹1.80 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி