தர்மபுரி: மாணவர்களுக்கு வினா விடை மலர் வழங்கிய மு. அமைச்சர்

2பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், திங்கட்கிழமை அன்று, பாலக்கோடு எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வினா விடை தொகுப்பு அடங்கிய கல்வி மலரை இலவசமாக வழங்கினார். முதல் கட்டமாக பெரியாம்பட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வி மலர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி