தர்மபுரி: சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்தவர் கைது

452பார்த்தது
தர்மபுரி: சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்தவர் கைது
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்டவிரோதமாக டீசலைப் பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த சுப்பிரமணி (51) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 80 லிட்டர் டீசலைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி