தர்மபுரி: வீட்டில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

1பார்த்தது
தர்மபுரி: வீட்டில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது
பாப்பாரப்பட்டி அடுத்த செக்கோடி கிராமத்தில் அம்மாசி என்பவர் தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, புதன்கிழமை இரவு பாப்பாரப்பட்டி உதவி காவல் ஆய்வாளர் மாரி தலைமையிலான காவலர்கள் நடத்திய சோதனையில் அம்மாசி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26 வகையான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி