தர்மபுரி: இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

2பார்த்தது
தர்மபுரி: இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு
மாரண்டஅள்ளி அடுத்த பெலமாரனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே நின்ற இருசக்கர வாகனத்தை ஓட்ட முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரது மனைவி பார்வதி அவரை பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது குறித்து மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி