தர்மபுரி: என் ஊர் என் கனவு திட்டம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

200பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிப் பாதையை நோக்கிய 'என் ஊர் என் கனவு' திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் மணி, தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். இறுதியாக, மாவட்ட ஆட்சியர் சதீஷ் விருந்தினர்களுக்குப் பாராட்டு கேடயங்கள் மற்றும் பொன்னாடைகளை வழங்கி கௌரவித்தார்.