தர்மபுரி: விவசாயிகள் நீர் பாசனத்திற்காக நாகாவதி அணை திறப்பு

0பார்த்தது
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ள எர்ரப்பட்டி, அரகாசனஅள்ளி, சின்னம்பள்ளி கிராம விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், நாகாவதி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக இன்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் சதீஷ் அணையை திறந்து வைத்தார். இதன் மூலம் 100 நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கு 5 நாட்கள் வீதம் 1993 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்நிகழ்வில் தர்மபுரி எம்பி மணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.