தர்மபுரி: சித்திரை திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா

558பார்த்தது
பாலக்கோடு அருகே சோமனஹள்ளி கிராமத்தில் ஶ்ரீஅக்குமாரியம்மன் சித்திரை திருவிழாவின் 7வது நாளான வெள்ளிக்கிழமை அன்று எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 12 கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து, ஊருக்கு ஒரு காளை வீதம் 12 காளைகளை கலந்து கொள்ளச் செய்தனர். மேள தாளங்களுடன் கோ பூஜை செய்யப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்ட பிறகு காளைகள் திறந்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி