பாலக்கோட்டில் ஶ்ரீ புதூர்மாரியம்மன் கோயில் திருவிழாவின் நான்காம் நாளான நேற்று வியாழக்கிழமை மாலை எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 12 கிராமங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன. பாரம்பரிய முறைப்படி கோ பூஜை செய்யப்பட்டு, புனித நீர் காளைகளின் மீது தெளிக்கப்பட்டது. ஊர் கவுண்டரின் காளை முதலில் விடப்பட்டது, அதைத் தொடர்ந்து மற்ற காளைகள் கோவிலைச் சுற்றி சீறிப் பாய்ந்தன. சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த எருதாட்டத்தை கண்டு ரசித்தனர்.