தர்மபுரி: ஊராட்சி டேங்க் ஆபரேட்டர் தற்கொலை.. விசாரணை

65பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தொப்பூர் அருகே உம்மியம்பட்டி காலனியை சேர்ந்தவர் செல்வம். இவர், தொப்பூர் ஊராட்சியில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக பணி செய்து வந்தார். நேற்று மார்ச் 23 மாலை உம்மியம்பட்டி கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி அருகே இருக்கும் ஆலமரத்தில் செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தொப்பூர் காவலர்கள் செல்வம் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைத்தனர் மேலும். இதுகுறித்து தொப்பூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி