தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட தொப்பூர் அருகே கட்டமேடு பகுதியில் தினமும் 50-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் அதிவேகமாக மண் ஏற்றி செல்வதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து பலமுறை எடுத்துரைத்தும் நடவடிக்கை எடுக்காததால், விபத்து அபாயம் ஏற்படும் எனக்கூறி இன்று (பிப். 9) திங்கட்கிழமை காலையில் பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.