தர்மபுரி: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

2பார்த்தது
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று (நவ. 19) புதன்கிழமை, காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாமில் (பெட்டிஷன் மேளா) 100 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, தீர்வு காணப்பட்டது. மேலும், புதிதாக பெறப்பட்ட 41 மனுக்கள் துறை சார்ந்த விசாரணைக்காக அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி