மாரண்டஹள்ளி நகரப் பகுதியில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது. அருகாமையில் பேருந்து நிலையம் மற்றும் கோவில் இருப்பதால், மதுபானக் கடையை மூடவோ அல்லது இடமாற்றம் செய்யவோ கோரி, சர்வதேச உரிமைகள் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் கிஷோர் தலைமையில், தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசினர்.