தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பிரபு (41) என்பவர் நேற்று வியாழக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை மீது ஏறியதில் தவறி கீழே விழுந்தார். பின்னர் அவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.