காரிமங்கலம் அடுத்த அத்தனூர் பகுதியில் தங்கராஜ் - புவனேஸ்வரி தம்பதி வெயில் காரணமாக வீட்டின் வெளியே படுத்திருந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை விடியற்காலைக்குள், புவனேஸ்வரி கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்கத் தாலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றார். கூச்சலிட்ட போதிலும், தப்பிக்க முயன்ற மர்ம நபரை பிடிக்க முடியவில்லை. இது குறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.