தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி நாகர்கூடல் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார்-நாகவேணி தம்பதியினரின் 16 வயது மகள், நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தபோது காணாமல் போனார். மாலை வீடு திரும்பிய பெற்றோர் மகளைக் காணாததால் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இன்று புதன்கிழமை இண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிந்து இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.