தர்மபுரி: பொப்பிடி மாரியம்மன் கோவில் திருவிழா கொண்டாட்டம்

56பார்த்தது
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட பொப்பிடி கிராமத்தில் இன்று வியாழக்கிழமை அருள்மிகு மாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று, பக்தர்கள் அலகு குத்திக் கொண்டும், தீ சட்டி ஏந்தியும், அம்மன் வேடம் அணிந்தும், கரகம் எடுத்தும், மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி