தர்மபுரி: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

0பார்த்தது
தர்மபுரி: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பட்டா இல்லாத மக்களுக்கான பட்டா வேண்டி கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை (நவ. 6) காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மே 27 அன்று கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று கோஷமிட்டனர்.

தொடர்புடைய செய்தி