பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்த 5 கிலோ மீட்டர் சாலை குறித்து பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீரமைப்பதாக கூறி தார் சாலையை வெட்டி எடுத்த நிலையில், அது சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் அடிக்கடி விபத்துக்களையும் சந்தித்து வருகின்றனர். எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.