தர்மபுரி: ரெட்டியூரில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

75பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எர்ரனஅள்ளி ஊராட்சி ரெட்டியூர் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு சாலை குண்டும் குழியுமாக உள்ளது மேலும் சமீப நாட்களாக கனமழையின் காரணமாக மண்சாலை சேதமடைந்துள்ளது. சாலை வழியாக கக்கஞ்சிபுரம் தளவாயள்ளி புதூர் சமத்துவபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது மேலும் பள்ளி கல்லூரி வாகனங்கள், விவசாய பொருட்களை எடுத்து செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த சாலையை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மண்சாலையாகவே உள்ளது இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மண்சாலையை தார்சாலையாக அமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி