மாரண்டஅள்ளி நகரப் பகுதியில் கோவில் மற்றும் தனியார் பள்ளி அருகே செயல்படும் அரசு மதுபான கடை எண் 2835-ல் மது அருந்துவோரின் அட்டகாசத்தால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நூற்றுக்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தினர். பாலக்கோடு டிஎஸ்பி மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.