தர்மபுரி: தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு

0பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிண காசி காலபைரவர் திருக்கோயிலில், தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் மற்றும் 108 மிளகு சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. நவம்பர் 13 வியாழக்கிழமை காலை 5 மணி வரை நடைபெற்ற இந்த வழிபாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேய்பிறை அஷ்டமி நாட்களில் இங்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

தொடர்புடைய செய்தி