பாலக்கோட்டில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பார்வையாளராகப் பணிபுரியும் பரிமளா, கடந்த மாதம் 30 ஆம் தேதி கர்ப்பிணிப் பெண்கள் சிலரை அழைத்து வந்து, அரசு மருத்துவமனையில் சட்டவிரோதமாக ஆண்-பெண் குழந்தையை அறிய ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளார். இதுகுறித்து தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில், புரோக்கர்களான வடிவேல், ஆந்திராவைச் சேர்ந்த பிரதீப் மற்றும் கிளாரா மேனகாதேவி ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.