தர்மபுரி: வரத்து சரிவால் தக்காளி விலை உயர்வு

0பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டில், விளைச்சல் மற்றும் வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, ஒரு கிலோ தக்காளி ரூ. 50 முதல் ரூ. 60 வரையிலும், 25 கிலோ கூடை ரூ. 1500 வரையிலும் விற்பனையானது. முன்பு கிலோ ரூ. 20-க்கு விற்பனையான தக்காளி, தற்போது பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் இங்கு கொண்டு வரப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி