பென்னாகரம் அருகே ரங்காபுரத்தில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் கண்டறிந்து தெரிவிப்பதாக கிடைத்த தகவலின் பேரில், செவ்வாய்க்கிழமை மாலை மாவட்ட சுகாதார அலுவலக ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் செந்தில் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் ஸ்கேன் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. பரிமளா மற்றும் சாந்தி ஆகியோர் குழந்தையின் பாலினம் கூறுவதிலும், சட்டவிரோத கருக்கலைப்பிலும் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் பேரில் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.