தர்மபுரி: மாவட்டத்தில் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

1பார்த்தது
தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத் திருவிழா விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை, குப்பா கவுண்டர் தெரு, மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரிக்கப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. லாபம் குறைவாக இருந்தாலும், ஆன்மீகப் பணி என்பதால் விருப்பத்துடன் செய்வதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி