பாலக்கோடு அடுத்த சொக்கம்பட்டி காப்புகாட்டில் வனத்துறை காவலர்கள் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2 வாலிபர்கள் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றனர். வனகாவலர்களை கண்டதும் தப்பியோடிய இருவரில், காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் பிடிபட்டார். தப்பியோடியவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் எனத் தெரியவந்தது. இருவரும் இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுவது விசாரணையில் அம்பலமானது. விஜயனிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.