தொட்டலாம்பட்டியில் ஊர் மாரியம்மன் திருவிழா கொண்டாட்டம்

258பார்த்தது
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வட்டம், தொட்டலாம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா வியாழக்கிழமை காலை 7 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் விளக்கு தட்டு, பூ, பழங்கள், விளக்கு மாவு உள்ளிட்ட பொருட்களுடன் மேளதாளங்கள் முழங்க, ஆடல் பாடல்களுடன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி