
தர்மபுரி: திமுகவை விமர்சித்து வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணி
தர்மபுரி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, திங்கட்கிழமை காலை நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக அரசு ஆயிரம் கோடி செலவில் தர்மபுரி மாவட்டத்திற்கு காவிரி நீர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த முடியாததை விமர்சித்தார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தர்மபுரி மாவட்ட மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என அவர் உறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.
























