தர்மபுரி: எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

193பார்த்தது
தருமபுரி பழைய பேருந்து நிலையத்திற்கு மீண்டும் பேருந்துகளை இயக்கக் கோரி, தருமபுரி அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி மற்றும் அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். புதிய பேருந்து நிலையத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மாற்று வழி ஏற்படுத்தாவிட்டால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்தி