தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை இரவு அதிமுக அமைப்புச் செயலாளர் கேபி. அன்பழகன் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் ரவிமரியா பங்கேற்று திமுக அரசின் அவலங்களை விமர்சித்தார். அதிமுக அரசு அமைய பாடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.