தர்மபுரி: அதிமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

218பார்த்தது
தர்மபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் வீரமணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படவும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவும் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இணை செயலாளர் மணி வரவேற்றார். விவசாயப் பிரிவு தலைவர் டிஆர் அன்பழகன், நகர செயலாளர்கள் ரவி, பூக்கடை ரவி, மற்றும் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தொடர்புடைய செய்தி