தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோபிநாதம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில், காவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த பேரணியில், தலைக்கவசம் அணிவதன் அவசியம், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, அதிவேகமாக செல்வதைத் தவிர்ப்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான காவலர்கள் பங்கேற்றனர்.