தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில், மாவட்ட மற்றும் வெளி மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்றனர். இங்கு 128 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ. 11,000 முதல் ரூ. 40,000 வரை விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ. 10 லட்சம் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் மூட்டைக்கு ரூ. 5,000 விலை அதிகரித்துள்ளது.