தர்மபுரி: கடத்தூரில் 10 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை

268பார்த்தது
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வெற்றிலை வாரச்சந்தையில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் திரளாக பங்கேற்றனர். இங்கு 128 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ₹12,000 முதல் ₹16,000 வரை விற்பனையானது. ஒரே நாளில் சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான வெற்றிலை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி