தர்மபுரி: பாஜக சார்பில் நமோ டிராபி மாரத்தான் போட்டி

0பார்த்தது
தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பில் "நமோ டிராபி" மாரத்தான் ஓட்டப் போட்டி தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 22 அன்று நடைபெற்றது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் திருநாவுக்கரசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you