பெங்களூருவைச் சேர்ந்த மாதேஷின் மகன்
சூர்யா, தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பெரிய முருக்கம்பட்டியைச் சேர்ந்த லாவண்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா பெற்றோர் வீட்டுக்குச் சென்ற நிலையில்,
சூர்யா தனது மனைவிக்கும் அவரது சித்திக்கும் ஆபாச படங்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கம்பைநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.