தர்மபுரி: வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பினை ஆட்சியர் ஆய்வு

4பார்த்தது
தர்மபுரி: வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பினை ஆட்சியர் ஆய்வு
தருமபுரி தொகுதிக்குட்பட்ட மதிகோண்பாளையம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், நேற்று வியாழக்கிழமை மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவருடன் தருமபுரி வட்டாட்சியர் சௌகத் அலி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை விரைவாகவும், சரியாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி